லினக்ஸ் பதிப்புகளை USB மூலம் சோதிக்க/நிறுவ

லினக்ஸ் திறந்த மூல இயங்குதள மென்பொருள் என்பதால் பல வடிவங்களில் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. அவற்றில் Ubuntu, Suse, Debian, Slackware, Fedora, Mandriva, Knoppix, Gentoo, Mepis, Xandros, Linux Mint உள்ளிட்டவை பிரபலமாக இருக்கின்றன.

இவை பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் லினக்ஸ் பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு UnetBootin எனும் இலவச மென்பொருள் பயன்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் லினக்ஸ் ISO கோப்புகளை USB யில் எழுதி அதன் மூலம் பூட் செய்து லினக்ஸ்சை உங்கள் கணினியில் சோதித்து பார்த்து கொள்ளலாம்.

இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கி திறந்து கொள்ளுங்கள். இதனை உபயோகிக்கும் போது இரண்டாவது தேர்வான "Disk Image" என்பதனை தேர்வு செய்து கொண்டு, நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள லினக்ஸ் பதிப்பு ISO கோப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உங்கள் USB டிரைவ் எழுத்தினை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்து USB யில் எழுதி கொள்ளுங்கள்.



அடுத்து உங்கள் கணினியை துவங்கும் போது கீபோர்ட்டில் F2 அல்லது Del பட்டன்களை அழுத்தி தோன்றும் CMOS திரையில் Boot From USB என்பதனை அமைத்து கொள்ளுங்கள். இனி உங்கள் கணினி USB மூலம் பூட் ஆகி லினக்ஸ் மூலம் இயங்கும்.

ஏற்கனவே USB மூலம் விண்டோஸ் 7 நிறுவுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். பார்க்கவும். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

3 comments:

Anonymous said...

நீங்களும் லினக்ஸைப் பற்றி எழுதுவது வரவேற்கத்தக்கது.
நன்றி.

Tech Shankar @ டெக்‌ஷங்கர் said...

நன்றி தலைவா.. உங்கள் சேவை பாராட்டுதற்கு உரியது. பிரபு சொன்னதைப் போல நீங்களும் லினக்ஸ் பற்றி எழுதி இருப்பது மகிழ்வைத் தருகிறது.

Anonymous said...

use in this ubuntu